விக்ரமுக்கு ‘நோ’ சொல்லும் ராஷ்மிகா… எதற்காக தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு சினிமாவில் உருவான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் என்ட்ரி ஆகி ரசிகர்கள் மனதில் கொள்ளை அடித்தார்.

பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் படத்தில் இவருக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. அதோடு அண்மையில் வெளிவந்த புஷ்பா படம் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் படவாய்ப்புகளும் குவிய தொடங்கியது.

குறிப்பாக தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளின் படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார். இதனிடையே தற்போது தளபதி விஜயின் வாரிசு படத்தில் தாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த சூழலில் சியான் விக்ரமின் 61-படத்தில் ஜோடியாக நடிக்க ராஷ்மிகாவை தேர்வு செய்ததாக தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிக்க முடியாது என தெரிவித்து விட்டதாக கூறியுள்ளாராம்.

இதன் காரணமாக இவருக்கு பதிலாக நடிகை மாளவிகா மோகனனை ஹீரோயினாக நடிக்கை வைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.