Connect with us

செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகம்

செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ்

b658acb920140bb5a741ed8c33f5081b

செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார் 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கவில்லை என்பதால் மாணவர்கள் மிகவும் சோர்ந்து போய் உள்ளனர். இதனை அடுத்து தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து உள்ளதை அடுத்து பள்ளிகளில் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது

அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்க தயார் நிலையில் உள்ளோம் என்றும் ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டும் வரவழைத்து அவர்களுக்கு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top