தமிழகத்தில் மழலையர் பள்ளிகள் மீண்டும் தொடங்க அனுமதி – கல்வித்துறை அறிவிப்பு..!!!

தமிழகத்தில் மழலையர் பள்ளிகள் கைவிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2381 மழலையர் பள்ளிகள் தொடர்ந்து இயங்க கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் 2381 மழலையர் பள்ளிகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டது. குறிப்பாக ஆசிரியர்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களில் நடப்பாண்டு முதல் மழலையர் பள்ளிகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழகத்தில் மழலையர் பள்ளிகள் மீண்டும் தொடங்க அனுமதி – கல்வித்துறை அறிவிப்பு..!!!

இத்தகைய அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த சூழலில் கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன் படி,தமிழகத்தில் உள்ள 2381 மழலையர் பள்ளிகள் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை திருமணம்… சிதம்பரம் தீட்சிதர் ஒருவர் கைது..!!

அதே போல் இவர்களுக்கு மாதம் ரூ.5000 தொகுப்பூதியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மழலையர் பள்ளிகள் கைவிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய அறிவிப்பானது வரவேற்கத்தக்கதாக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment