Connect with us

ஆளுநரை பொறுப்பிலிருந்து நீக்குக! மாநாட்டில் அதிகார வரம்பு மீறி பேச்சு!!

ஆர் என் ரவி

செய்திகள்

ஆளுநரை பொறுப்பிலிருந்து நீக்குக! மாநாட்டில் அதிகார வரம்பு மீறி பேச்சு!!

ஆளுநரை பொறுப்பிலிருந்து நீக்குக! மாநாட்டில் அதிகார வரம்பு மீறி பேச்சு!!

இரண்டு நாட்களுக்கு முன்பு தென் மண்டல பல்கலை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பல்கலை துணைவேந்தர் கலந்து கொண்டிருந்தனர்.

அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி உரையாற்றினார். அந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் ஆளுநர் ரவி கலந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் இந்த கூட்டத்தில் பேசி இருந்தார்.

அவரின் பேச்சு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து கூறியுள்ளார். அதன்படி பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். தென்மண்டல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாட்டில் ஆளுநர் ரவி அதிகார வரம்பு மீறி பேசியுள்ளார்.

ஆளுநர் ரவி தமது அதிகார வரம்பு மீறி அரசியல் கருத்துக்களை பேசியிருப்பது கண்டனத்துக்குரியது என்று வைகோ கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார், டெல்லி முதலாளிகள் என சொல்கிறார்களோ அதே கருத்தை ஆளுநர் ரவி மாநாட்டில் கூறினார்.

இந்தியா என்பது வேறு பட்ட மக்களின் உடன்படிக்கையால் அமைந்தது அல்ல என்று பேசியுள்ளார் ஆளுநர். இந்தியா என்ற நாடு 1947இல் பிறந்தது அல்ல என்றும் ஆளுநர் ரவி கோவை மாநாட்டில் பேசியுள்ளார் என்றும் வைகோ கூறினார். இந்தியா என்ற நாடு 1947 முன்பு எங்கே இருந்தது என்பதை விளக்க வேண்டும் என்று வைகோ கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top