சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்! பழனியில் வியாபாரிகள் போராட்டம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் மலையடிவாரத்தில் சாலை ஓர வியாபாரிகள் தாக்கப்பட்டதாக கூறி இந்து சமநிலையை துறை இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பழனி முருகன் கோயிலில் நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்களின் வரத்தை நம்பி வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இதற்கிடையில் சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைப்பெற்றது.

பெரும் சோகம்! ராஜஸ்தானில் 3 மாணவர்கள் தற்கொலை..!!

அப்போது பூவாயி என்ற வியாபாரியை லஷ்சுமி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக வியாபாரிகள் 200-க்கும் மேற்பட்டோர் லஷ்மியை பாதுக்காப்பாக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அந்த சமயம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதே சமயம் கோயில் உதவி ஆணையர் லஷ்மியை தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரிகள் சம்பவம் குறித்து விரிவான தகவல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி..!!

இது குறித்து தமிழக அரசு நடிவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாலை ஆக்கிரமிப்புகள் நடைபெறுவதால் தங்களில் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.