Connect with us

அத்தியாவசிய பட்டியலில் 26 மருந்துகள் நீக்கம்.. புற்றுநோயை உண்டாக்குவதால் அதிரடி!!

Tablets

செய்திகள்

அத்தியாவசிய பட்டியலில் 26 மருந்துகள் நீக்கம்.. புற்றுநோயை உண்டாக்குவதால் அதிரடி!!

இந்தியாவில் Rantac, Zinetac போன்ற Antacid Ranitidine எனப்படும் மருந்துகள் அத்தியாவசிய பட்டியலில் இருந்து    26 மருந்துகள்    நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தினத்தில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) ஆகியோருடன் சுகாதார அமைச்சகம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது Rantac, Zinetac போன்ற Antacid Ranitidine மாத்திரைகளை சாப்பிடுவதால், ஏதாவது ஒரு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

பொதுவாக இத்தகைய மாத்திரைகள்  அசிடிட்டி மற்றும் வயிற்றுவலி  போன்ற  பிரச்சினைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுகிறது. இருப்பினும் அதிகப்படியாக உப்புகள் இருப்பதால், புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக கூறியது.

இதனால் ப்ளீச்சிங் பவுடர், குளோர்பெனிரமைன், கன்சிக்ளோவிர் மற்றும் கனமைசின் உள்ளிட்ட 26 மருந்துகள் நீங்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top