Tamil Nadu
சாத்தான்குளத்தை நினைவுபடுத்துகிறார்களா? கோவை உணவகம் தாக்குதலுக்கு கமல் கண்டனம்!
சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல் துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கோவையில் உள்ள உணவகத்தில் நடந்த தாக்குதல் நினைவு படுத்துகிறது என கமல்ஹாசன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கோவையில் உள்ள உணவகம் ஒன்றில் இரவு 10 மணிக்கு மேல் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த அப்பாவி பொது மக்களை காவல்துறை எஸ்ஐ ஒருவர் அடித்து உதைத்தது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது
இதனை அடுத்து அந்த குறிப்பிட்ட எஸ்ஐ உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். மேலும் இது குறித்து மனித உரிமை ஆணையமும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது
இந்த சம்பவம் குறித்து கமல்ஹாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: இரவு 11 மணியைத் தாண்டி உணவகங்கள் செயல்படக் கூடாது என்பதே அரசின் ஆணை. ஆனால் கோவை காந்திபுரத்தில் பத்தரை மணிக்கு முன்னதாகவே போலீஸ் ஒரு உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்குகிறது. சாத்தான்குளம் படுகொலையை நினைவு படுத்துகிறார்களா? பதிலளிக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை என்று தெரிவித்துள்ளார்
