Connect with us

என்னது!!! உயிரிழந்தவர்களுக்கு மீண்டும் திருமணமா?

Copy of 1 Frame 29 1 16591498733x2 1

செய்திகள்

என்னது!!! உயிரிழந்தவர்களுக்கு மீண்டும் திருமணமா?

வட மாநிலங்களை பொருத்தவரையில் வினோதமான சடங்குகளைச் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் கர்நாடக மாவட்டத்தில் ‘பிரேதா கல்யாணம்’ என்ற பெயரில் உயிரிழந்தவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் பிரபல யூடியூபரான அன்னி அருண் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் 30 வருடங்களுக்கு முன்னர் இறந்த இரு குழந்தைகளுக்கு வினோத சடங்கை செய்து வைக்கின்றனர்.

இதற்காக புதிய திருமண ஆடைகளை வாங்கி இரண்டு இருக்கைகள் உள்ளவாறு அமர வைத்து மணமக்கள் இருப்பதாக நினைத்து சடங்குகளை நடத்தி வருகின்றனர்.

பின்னர் தாலி கட்டும் நேரத்தில் மணமக்களின் பெயர் என்ன என கேட்டு மணமகனுக்கு சந்தப்பா என்றும் மணப்பெண்ணுக்கு சோபா என்ற பெயர் வைத்து அட்சதை தூவி மணமக்களுக்கு கோலாகலமாக திருமணம் நடத்தி வைக்கின்றனர்.

இவ்வாறு திருமணம் செய்து வைப்பதால் அவர்களுடைய ஆத்மா சாந்தியடையும் என அவர்களது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top