Connect with us

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் மெத்தனம்-தரக்கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்ட்!

suspend 1

செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் மெத்தனம்-தரக்கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்ட்!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் மெத்தனம்-தரக்கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்ட்!

பொதுவாக தமிழர்களின் முக்கியமான பண்டிகையாக காணப்படுவது பொங்கல். பொங்கல் திருநாளை தமிழர் திருநாள் என்றும் அழைப்பர். பொங்கல் தினம் என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வருடம் தோறும் வழங்கப்பட்டு வரும்.

அந்த வரிசையில் இன்றைய வருடமும் இருபத்தி ஒரு பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்றதாக காணப்பட்டது.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு தரம் பற்றி ஆளுங்கட்சி வரிசையாக ஆய்வு மேற்கொண்டது. அதன் வரிசையில் தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு தரக்கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களில் தரம் குறித்த புகார்கள் வந்ததால் விசாரணை நடைபெற்றது என்றும் தெரிகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு  பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செயல்பட்டதால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் சில இடங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்த விரிவான விசாரணை நடந்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top