அரசு அதிகாரிகள் இடமாற்றம்; அதிமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் அரசு அதிகாரிகளை இடமாற்றத்துக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது தலைமை நீதிபதி முனீஸ் வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதில் இடமாற்றம் செய்யப்பட்ட 17 காவல் துறை அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தேர்தல் நடவடிக்கைகளில் காவல்துறைமீது நடவடிக்கை சந்தேகம் இருந்தால் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம் என கூறினார்.

மேலும், வக்கீல்கள் பொதுநல வழக்குகள் தொடர்வதை சுப்ரீம் கோர்ட் தொடர்வதை கண்டிக்ககுறியதாகவும் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கானது பொதுநல வழக்கு அல்ல கூறி வழக்கை தள்ளுபடி செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment