அதிகாலை 4 மணிக்கு கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகளில் அலாரம்.. அரசு செய்த ஏற்பாடு எதற்காக?

ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அரசே அலாரத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அதிகாலை 4 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள கோவில்கள் சர்ச்சுகள் மசூதிகள் ஆகிய அனைத்திலும் அலாரம் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிக்க வேண்டும் என்பதற்காக அலாரம் வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் இந்த அலாரம் ஒலிப்பதை உறுதி செய்வார்கள் என்றும் எனினும் அவர்களுக்கு இது கட்டாயம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் பிப்ரவரி 27ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிக்க வேண்டும் என்பதற்காக இந்த அலாரத்தை அரசே ஏற்பாடு செய்தப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு ஒரு பக்கம் ஆதரவு இருந்தாலும் இன்னொரு பக்கம் எதிர்ப்புகள் குவிந்து வருகிறது.

முதியவர்கள் குழந்தைகள் கர்ப்பிணிகள் ஆகியோர் இந்த அலாரத்தால் தூக்கம் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான ஹரியானா மக்கள் இந்த ஏற்பாட்டுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியானா மாநில அரசு கொண்டுவந்த இந்த திட்டத்தை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். பொது தேர்வு என்பது மிகவும் முக்கியமானது என்றும் பொதுத்தேர்வில் அதிகம் மதிப்பெண்கள் பெற்றால் தான் அவர்களுடைய எதிர்கால பிரகாசமாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஹரியானா மாநிலத்தின் இந்த திட்டத்தை மற்றா மாநிலங்கள் பின்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.