டெல்டா மாவட்டங்களில் ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

வடகிழக்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பல குடியிருப்புப்பகுதிகள், வீடுகள், சாலைகள் அனைத்திலும் மழை நீர் தேங்கியது.

டெல்டா மாவட்டங்கள்

இவற்றோடு மட்டுமில்லாமல் டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் அனைத்திலும் இந்த மழைநீர் கொட்டித் தீர்த்ததால் பயிர்கள் நாசமடைந்தன.இது குறித்து ஆய்வு செய்ய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்,அமைச்சர் பெரியசாமி தலைமையிலான அமைச்சர் குழு ஒன்றை ஏற்படுத்தி இருந்தார்.

ஸ்டாலின்

அவர்கள் இன்று காலை சென்னை தலைமைச்செயலகத்தில் டெல்டா பயிர் பாதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சர்  ஸ்டாலின் ஹெக்டருக்கு ரூபாய் 20,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அதன்படி அறுவடைக்கு தயாராக இருந்த சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூபாய் 20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து அமைச்சர்கள் குழு அளித்த அறிக்கை அடிப்படையில் இந்த நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.குறுவை-கார்-சொர்ணவாரி பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சம்பா சாகுபடி செய்து நீரில் மூழ்கிய பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூபாய் 6038 மதிப்பில் இடுபொருள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment