சந்தன கடத்தல் வீரப்பன் விவகாரத்தில் நிவாரணம்; ஹைகோர்ட் உத்தரவு!

சில வருடங்களுக்கு முன்பு சந்தன கடத்தல் மன்னன் என்றால் அனைவரும் சொல்வது வீரப்பன். சந்தனக்கடத்தல் வீரப்பனால் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களும் மிகவும் அச்சத்தில் இருந்தது.உயர்நீதிமன்றம்

இவரை பிடிக்க முடியாமல் தமிழக அரசும் மிகவும் சிரமப்பட்டது. இதனால் இவரை காட்டுப்பகுதிகளில் தேடினர். இவர் ஜெயலலிதாவின் ஆட்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தநிலையில்  சந்தனக்கடத்தல் வீரப்பன் விவகாரத்தில் தற்போது ஹைகோர்ட் பல்வேறு நிவாரண வழங்கக்கோரி உத்தரவிட்டுள்ளது. அதன்படி வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணத்தை தரக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.

சிறப்பு அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 7.20 கோடி நிவாரணம் வழங்க கோரி ஹைகோர்ட்டில் மனுவில் குறிக்கப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க 1993ஆம் ஆண்டு சிறப்பு அதிரடிப்படையினர் மலை கிராமங்களில் தேடுதல் வேட்டை புரிந்தனர். இந்த மலை கிராம மக்களை பிடித்து சென்று சட்டவிரோதமாக சித்திரவதை செய்து முகாம்களில் சிறை வைத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment