ஹெலிகாப்டர் சகோதரர்கள்: முறையாக விசாரணை நடத்தினால்தான் நிவாரணம்!

தமிழகத்தில் பல நிதி நிறுவனங்கள் காணப்படுகிறது. ஆனால் ஒருசில நிதி நிறுவனங்களில் சீட்டுக்கட்டு மக்கள் பெரும் ஏமாற்றத்தை சந்திக்கின்றனர்.அவை தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகிறது. இதில் பலரும் தங்களது கைவரிசையை காட்டி கொண்டு இருக்கின்றனர்.நீதிபதி

சில நாட்களுக்கு முன்பு இது போன்று தமிழகத்தில் பெரிதும் பேசப்பட்டவர்கள் ஹெலிகாப்டர் சகோதரர்கள். அவர்கள் குறித்து தற்போது வழக்கு விசாரணையில் திருப்தி இல்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஹெலிகாப்டர் சகோதரர்கள் நிதி நிறுவன மோசடி வழக்கு குறித்து விசாரணையில் திருப்தி இல்லை என்று நீதிபதிகள் தங்கள் கருத்தினை கூறியுள்ளனர். வழக்கில் முக்கிய குற்றவாளிகள் நிலுவையில் உள்ள வழக்குகளில் ஏன் கைது செய்யவில்லை? என்றும் நீதிபதிகள் கேள்வி கேட்டுள்ளனர்.

விசாரணை அதிகாரி முறையான விசாரணை மேற்கொண்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

கும்பகோணத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் கணேசன்,சுவாமிநாதன் இருவரும் நிதி நிறுவனம் நடத்தி பெரும் மோசடி செய்ததாக புகார் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் இவர்கள் இருவரையும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment