நிவாரணத் தொகை, மளிகை பொருட்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

573f38cee4babb39c6820a11971d0bb2-2

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு 14 வகை நிவாரண பொருட்கள் மாற்றம் ரூபாய் ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது என்பது தெரிந்ததே

அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்த பணம் மற்றும் மளிகை பொருட்களை பெரும்பாலானோர் வாங்கிவிட்டனர். இருப்பினும் ஒரு சிலர் இன்னும் வாங்காமல் இருப்பதை அடுத்து, அவர்களுக்காக கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது 
தமிழகத்தில் நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நிவாரண பொருட்களை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக ஜூலை 31-ஆம் தேதி வரை தான் நிவாரணப் பொருள்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் புதிய அட்டைதாரர்களும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து நிவாரண பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment