
தமிழகம்
பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு-அண்ணா பல்கலை.
தற்போது ஒவ்வொரு கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வு நடைபெற்று கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வு நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முந்தைய செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சியை அளித்ததாக காணப்பட்டது.
ஏனென்றால் அந்த செமஸ்டர் தேர்வில் 38 சதவீதம் மட்டுமே மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தகவல் கிடைத்தது. மேலும் பலரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்துள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தரவரிசையில் கிண்டி பொறியல் கல்லூரி முதலிடத்தில் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தினை அரியலூர் கேகேசி கல்லூரி பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தரவரிசை பட்டியலை பார்த்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்றும் கூறியுள்ளது.
