அருண்விஜய்-ஹரியின் யானை பட டீசர் வெளியீடு

அருண்விஜய் தற்பொழுது 3 படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று யானை திரைப்படம். இந்த யானை படத்தை பிரபல இயக்குநர் ஹரி இயக்கியிருக்கிறார்.

இதற்குமுன் ஹரி இயக்கிய அனைத்து திரைப்படங்களும் ஹிட்டடித்துள்ளது. குறிப்பாக சிங்கம் வரிசையில் வந்த திரைப்படங்கள் அமோக வரவேற்பைப் பெற்றது.

அருண்விஜயும் ஹரியும் இணையும் முதல் திரைப்படம் யானை. இந்த திரைப்படத்தை டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

மேலும் ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை இராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது யானை படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment