தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வளம் வரும் சிவகார்த்திகேயன் ‘டான்’.படத்தை தொடர்ந்து இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் ஜோடியாக நடிகை மரியா எனும் உக்ரைன் நாட்டு நடிகை நடித்து வருகிறார்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கயுள்ளார்.தமிழ் ,தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படம் தான் பிரின்ஸ்.இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.
இந்த படத்தின் கதைக்களம் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு டூரிஸ்ட் கைடு , நடிகை மரியா வெளிநாட்டில் இருந்து வர அவருக்கு ஊரை சுற்றி காடடிப்பவராக நடித்துள்ளார், இந்த படத்தில் பல காட்சிகள் காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது.
சமீபத்தில் இந்த படத்தின் 1st சிங்கள் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி வெளியானது, இந்த படத்தில் இடம்பெற்ற ‘பிம்பிலிக்கி பிலாபி’ என்ற பாடலை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மியூசிக் லேபலான ஆதித்யா மியூசிக் யூடூப்பில் படக்குழுவினர் வெளியிட்டது . இந்நிலையில் இந்த பாடலை கிட்டத்தட்ட 5.5 மில்லியன் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது.
துருவ் விக்ரமின் ஆல்பத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி! மாஸ் காட்டும் காதல் பாடல் இதோ!
இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாடல் குறித்து மாஸ் அப்டேட் நேற்று வெளியான நிலையில் இப்படத்தின் ஜெஸிக்கா என்ற இரண்டாவது பாடல் இன்று படக்குழு வெளியிட்டது.