Connect with us

வெளியானது மருத்துவ தர வரிசைப் பட்டியல்! வெளியிட்டார் மா.சுப்பிரமணியன்!!

govenrment doctors

செய்திகள்

வெளியானது மருத்துவ தர வரிசைப் பட்டியல்! வெளியிட்டார் மா.சுப்பிரமணியன்!!

வெளியானது மருத்துவ தர வரிசைப் பட்டியல்! வெளியிட்டார் மா.சுப்பிரமணியன்!!

பள்ளியில் படிக்கின்ற மாணவர்களின் பெரும் கனவாக அமைந்துள்ளது எம்பிபிஎஸ் படிப்புதான். இதற்காக அவர்கள் கடினமாக படிக்கின்றனர். அவர்களுக்கு பெரும் தடையாக ஓரிரு ஆண்டுகளாக அமைந்துள்ளது நீட்தேர்வு. இந்த நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிக் கூட்டமும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மருத்துவ தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் 514 மதிப்பெண்களுடன் சிவா முதலிடத்தைப் பிடித்துள்ளார். பிரகாஷ்ராஜ் இரண்டாவது இடமும், சந்தானம் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

எம்பிபிஎஸ் படிப்புக்கு முப்பத்தி ஏழு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5175 இடங்களும் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 இடங்களும் 18 தனியார் கல்லூரிகளில் 2650 எம்பிபிஎஸ் இடங்கள் அரசுக்கு ஒதுக்கப் பட்டுள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

www.tnmedicalselection.net ,www.tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி இருபத்தி ஏழாம் தேதி முதல் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top