தனுஷின் வாத்தி படத்தின் ரிலீஸ் உரிமை: மாஸான அறிவிப்பு!!

நடிகர் தனுஷின் வாத்தி படத்தின் தமிழக விநியோக உரிமையை பிரபல நிறுவனம் தட்டிச்சென்றுள்ளது.

தமிழ்சினிமாவை பொறுத்தவரையில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நானே வருவேன் படத்தின் வெற்றியை தொடர்ந்து வாத்தி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை தெலுங்கு பட தாயாரிப்பாளர் வம்சி தயாரித்து வருகிறார். அதே போல் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். அதோடு சமுத்திரக்கனி, சாய் குமார், ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதனிடையே தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இருப்பினும், வினியோகிஸ்தர் உரிமை குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இந்த சூழலில் விஜய்யின் வாரிசு பட உரிமையை கைப்பற்றிய 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வாத்தி படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.