நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு!

சில நாட்களுக்கு முன்பு நம் தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது.வாக்காளர்கள்

சென்னையில் 16 தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி. வரைவு பட்டியலில் 22 ஆயிரத்து 492 வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

25 ஆயிரத்து 515 வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் அதிக வாக்காளர்கள் உள்ள  தொகுதியாக வேளச்சேரி உள்ளது. வேளச்சேரியில் 3.15 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

www.nvsp.in என்ற இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அந்த மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டார்.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 23 லட்சத்து 42 ஆயிரத்து 119 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் மட்டும் 11,37,113 பேர் உள்ளனர்.பெண் வாக்காளர்கள் மட்டும் 12 லட்சத்து 4 ஆயிரத்து 743 பேர் உள்ளனர்.இதனால் திருச்சியில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment