செம்ம வைரல்! துணிவு படத்தின் ‘காசேதான் கடவுளடா’ பாடல் வெளியீடு!!

தமிழ் சினிமாவில் நேர்க்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை இயக்கியவர் ஹெச்.வினோத். இவர் மீண்டும் நகடிர் அஜித்தின் துணிவு படத்தில் கூட்டணி சேர்ந்துள்ளார்.

அதேபோல் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், சிபி சக்கரவர்த்தி, பாவனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜிப்ரன் இசையமைக்கும் இப்படத்தில் அஜித்க்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படம் பொங்கலுக்கு வெளியானகும் நிலையில் இறுதிகட்ட டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த சூழலில் படத்தின் ’சில்லா சில்லா’சில தினங்களுக்கு முன் வெளியாகி யூட்டியூபில் 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

தற்போது படத்தின் 2-வது பாடலான ‘காசேதான் கடவுளடா’ பாடலை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது அஜித் ரசிகர்கள் ‘காசேதான் கடவுளடா’ பாடலை வைரலாக்கி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.