கொரோனா… புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !!

கொரோனா பரவலைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதன் படி,  கொரோனா  பரவலைத் தடுக்க பள்ளி நிர்வாகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் , ஊழியர்கள்  மற்றும் தடுப்பூசி போட தகுதியுடைய மாணவர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்கள் முறையாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். பள்ளிகளை முறையாக சுத்தம் செய்தல் சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மாணவர்கள் உள்ளே நுழையும் போது அனைத்து கதவுகளையும் திறந்து வைத்திருக்க வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் அனைவரும் புத்தகங்கள், உணவு பொருட்கள் போன்றவற்றை மற்ற மாணவர்களுக்கு பகிர கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் மாணவர்களை மற்ற மாணவர்களுடன் தனிமைபடுத்த வேண்டும். பிறகு சுகாதாரத் துறைக்கு அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment