
பொழுதுபோக்கு
விருமன் படத்தின் “மதுரவீரன் பாடல்” வெளியீடு..!! வீடியோ வைரல்..!!
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் விருமன். இப்படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களாக தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஏற்கனவே கார்த்திக் நடித்த கொம்பன் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
தற்போது வெளியாகும் விருமன் படமானது மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கிராமத்து பாணியில் படத்தை வேற லெவலில் எடுத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அதோடு மிகப்பெரிய இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். தந்தை-மகன் உறவை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ள இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்து.
இன்றைய தினத்தில் மதுரையில் விருமன் படத்தின் பாடல்களும், ட்ரைலரும் வெளியாவதாக படக்குழுவினர் தெரிவித்த நிலையில் விருமன் படத்தில் இடம்பெற்றுள்ள மதுரவீரன் என்ற பாடல் இணையத்தில் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.
மேலும், விருமன் படத்தின் பாடல்களும், ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா கலந்துகொள்ள இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.
