சூடுபிடிக்கும் உத்தர பிரதேச சட்டமன்றத்தேர்தல் களம்; இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கை வெளியீடு-காங்கிரஸ்!
கடந்த ஓரிரு வருடங்களாக இந்தியா தேர்தல் களமாகவே காணப்படுகிறது. ஏனென்றால் கடந்த ஆண்டு ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த ஆண்டும் இதே போல் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகவும் காணப்படுகிறது.
அதன்படி உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதிலும் குறிப்பாக உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் உத்தர பிரதேச மக்களுக்கு அடுத்தடுத்து தேர்தல் வாக்குறுதிகள் வந்த வண்ணமாகவே உள்ளது. காங்கிரஸ் தரப்பிலிருந்து இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தி இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
உத்தரபிரதேச அரசின் மீது இளைஞர்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி பேசினார். உ.பியில் யோகி ஆதித்யநாத்அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க தவறிவிட்டது என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.
இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வை என்பது உத்தர பிரதேசத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அளிப்பதற்கான திட்டங்கள் உத்தரப் பிரதேசத்தில் இருந்து தொடங்கப்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.
