அஜித்தின் ‘துணிவு’படத்தின் ரிலீஸ்… தயாரிப்பாளர் மாஸ் அப்டேட்..!!

தென்னியாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் வலிமை படத்திற்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்க்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியா நடித்திருக்கிறார்.

இந்நிலையில் 3-வது முறையாக போனிகபூர் தயாரிப்பில் ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார். அதே போல் தமிழகத்தில் வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளது.

இந்த சூழலில் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதன் படி, துணிவு படம் பொங்கலுக்கு முன்னதாகவே வருகின்ற 11-ம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விஜய்யின் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் இரண்டு படங்களில் ஒரே தேதியில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் பேசப்பட்டது. தயாரிப்பாளரின் இத்தகை அறிவிப்பால் விஜய் – அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

மேலும், எதுவாக இருந்தாலும் சரி படம் வெளியானால் போதும் என இரு தரப்பு ரசிகர்கள் அதிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.