நாகை மீனவர்கள் 9 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 9 பேரை திரிகோணமலை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

நாகை மாவட்ட மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது எல்லைத்தாண்டி இலங்கையின் முல்லை தீவு பகுதியின் மீன்பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையின நாகை மீனவர்கள் 9 பேர் மற்றும் ஒரு படகை கைப்பற்றினர். குறிப்பாக கடல் வளங்களை அழிக்கும் வகையில் நடந்துகொண்டதாக மீனவர்களை  கைது செய்தனர்.

பின்னர் திரிகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. மீனர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த சூழலில் தற்போது 9 நாகை மீனவர்களை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

அதோடு 10 ஆண்டு வரையில் இலங்கை பகுதிக்கு வரக்கூடாது என்றும் மீறி வந்தால் சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறினார். மேலும், மீனவர்களின் படகு அரசுடைமையாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment