Connect with us

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

Capture 29

பொழுதுபோக்கு

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

கௌதம் மேனன் கூட்டணியில் சிம்புவின் 7-வது படமாக உருவாகியுள்ளது வெந்து தணிந்தது காடு. ஜெய் முகன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லரின் படப்பிடிப்பை திருச்செந்தூரில் தொடங்கி அண்மையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இந்நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு முன்பையில் தொடங்கியது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் சிம்பு விமானத்தில் சென்ற புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டது வைரலாகி வந்தது.

அதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் வெளியாகி சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. இதனால் இப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த சூழலில் நடிகர் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top