தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் இவர் நடித்த மாஸ்டர் திரைப்படமானது வசூல் ரீதியில் மாஸ் காட்டி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தினை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கடந்த மாதம் காதலர் தினத்தில் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியானது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் யூடியூப்பிலும் 21 கோடி அதிகமானவர்களை கடந்து சாதனை படைத்தது.
இதே போன்று நடிகர் விஜய் பாடிய ஜாலியோ ஜிங்கானா வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பியது. யூடியூப்பிலும் 9 மணி நேரத்தில் 1 கோடி பார்வையாளர்களை கடந்த இந்த பாடல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதனிடையே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பீஸ்ட் படத்தின் வெளியீடு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன் படி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பீஸ்ட் படம் ஏப்ரல் 13- ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.