கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு ஒரு சில திரைப் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்து வந்த படங்கள் வெற்றி பெற்று வருகின்றன என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த படங்களில் ஒன்று ‘ட்ரிப்’. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் சன் டிவியின் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியானது
ஆனால் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட திரை படங்கள் நல்ல வசூலை பெற்று உள்ள நிலையில் இந்த படத்தை நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய தற்போது படக்குழுவினர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படம் பிப்ரவரி 5ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
யோகிபாபு, சுனைனா, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். உதய்சங்கர் ஒளிப்பதிவில், தீபக் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சாய் பிலிம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது
See us from Feb 5th on Big screen pic.twitter.com/MMMAFJwzJX
— Yogi Babu (@yogibabu_offl) January 21, 2021
See us from Feb 5th on Big screen pic.twitter.com/MMMAFJwzJX
— Yogi Babu (@yogibabu_offl) January 21, 2021