தமிழகத்தில் மேலும் 15 நாட்கள் லாக்டவுன் நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் மேலும் 15 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து டிசம்பர் 15ஆம் தேதி வரை தற்போது உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் கேரளாவுக்கு பொதுப் போக்குவரத்து அனுமதி அளிக்கப்படும் என்றும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்

மத்திய அரசு டிசம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கவேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு டிசம்பர் 15 வரை மட்டுமே ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்

அரசின் நடவடிக்கைகள் அனைவருக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து நோயை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்கள் உதவிட வேண்டும் என்றும் முதல்வர் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

dec 15 dec 15 a dec 15 b dec 15 c

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment