News
கொரோனா வைரஸ் பீதியால் சிறை கைதிகளுக்கும் கட்டுப்பாடுகள்

கொரோனா வைரஸ் பீதி காரணமாக சிறைக் கைதிகளை சந்திக்க இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சிறைக் கைதிகளை சந்திக்க வரும் உறவினர்களால் சிறைக்கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும் இதனை அடுத்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இதனை அடுத்து இன்னும் இரண்டு வாரங்களுக்கு சிறை கைதிகளின் உறவினர்கள் சிறையில் உள்ளவர்களை சந்திக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறைக்கைதிகளுக்கு கொரோனா பரவாமல் இருக்க மேலும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவும் சிறைத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது
