தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் 19- ஆம் தேதி நடைபெற இருப்பதால் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் வேட்புமனுக்கல் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. காலை முதல் ராமநாதபுரம் நகராட்சியில் தொடங்கி தொடர்ந்து 33 வார்டுகளுக்கான பரிசீலனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 7- வது வார்டுக்கான வேட்புமனு பரிசீலனை நடைபெற்ற போது அதிமுக சார்பில் சோம சுந்தரம், திமுக சார்பில் நாராயணன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்கள் வேட்புமனு தாக்கல் பரிசீலனைக்கு வந்தபோது அதிமுக சார்பில் சோம சுந்தரம் எழுத்து பிழைகள் உடன் தாக்கல் செய்திருந்ததாக தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரா நிராகரித்தது மட்டும் இல்லாமல் திமுக சார்பில் நாராயணன் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதனால் திமுக தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் இருந்தனர்.
இதனை தொடர்ந்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டனர். அப்போது நகராட்சி தேர்தல் அலுவலர் இது முற்றிலும் தவறானது ஒரு சில பிழைகள் இருந்தால் அதனை திருத்து கொள்ளுங்கள் என தெரிவித்தார்.
அப்போது வந்த திமுகவினர் மற்றும் அதிமுகவினரிடம் கடும் வாக்குவாதம் நிலவியது. அப்போது தேர்தல் நடத்தும் சந்திராவின் ரூம் கண்ணாடி நொறுக்கப்பட்டது,
மேலும், பரிசீலனை செய்யகூடாது என திமுகவினர் மோதல்களில் ஈடுப்பட்டு வருவதால் அங்கு போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளன.