புதிய கொரோனா பரவல்: நாடு முழுவதும் ஒத்திகை தொடக்கம்!!

புதிய வகை கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து நாடுமுழுவதும் நோய் தடுப்பு ஒத்திகை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக நாடு முழுவதும் நோய் தடுப்பு ஒத்திகை நடத்த வேண்டும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து இருந்தார். அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஒத்திகை நடைப்பெற்று வருகிறது.

சூடுபிடிக்கும் கொடநாடு வழக்கு.. எஸ்.பி. முரளி ரம்பாவிற்கு சம்மன்!!

அதன் ஒரு பகுதியாக அந்தந்த மாநிலங்களில் சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். இந்த ஒத்திகை நிகழ்வு என்பது கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்துவது ஆகும்.

அதே போல் மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா? ஆக்ஸிஷன் சிலிண்டர் வசதிகள் தேவைக்கேற்ப உள்ளதா? என்பது குறித்து ஆய்வில் பார்க்கப்படும்.

ஜன.9-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அப்பாவு!

மேலும், இந்தியாவில் புதிய தொற்றின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் சராசரியாக 157 ஆக பதிவாகி உள்ளது. நேற்றைய தினத்தை விட 2 மடங்கு அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.