அமெரிக்கா போர் ஒத்திகை: 3-ம் உலகப்போருக்கு ஆயத்தமா? அச்சத்தில் உலக நாடுகள்..

ரஷ்யா- உக்ரைன் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்கா- சீனாவும் தனித்தனியே போர் ஒத்திகையில் ஈடுபடுவதால் மூன்றாவது உலகப்போர் குறித்து அச்சம் எழுந்து இருக்கிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் அமெரிக்கா ரஷ்யாவில் எல்லையை ஒட்டியுள்ள போலந்த் போன்ற எல்லை நாடுகளில் போர் ஒத்திகையை நடத்திவருகிறது

அந்த வகையில் அதிக குண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தி வரும் விமானங்கள், ஏவுகளைகள், கவச வாகனங்கள் மற்றும் அதிநவீன துப்பாக்கிகளை கொண்டு தரை,வான்,கடல் என 3 மார்க்கங்களிலுல் ஒத்திகை நடத்தப்பட்டது.

ரஷ்யாவின் நேச நாடான சீனாவும் போர் ஒத்திகையில் ஈடுப்பட்டு இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே நேச நாடுகள் ஒன்றோடு ஒன்று போர் ஒத்திகையில் ஈடுப்பட்டு உள்ளதால் மீண்டும் ஓர் உலகபோர் ஏற்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment