பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆறு ஆண்டுகள் தொடர்ந்து போட்டியிட வில்லை என்றால் பட்டியலிலிருந்து நீக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேச்சை உறுப்பினர்கள் போட்டியிடுவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் பல்வேறு கட்சிகள் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற போதிலும், சின்னங்கள் ஒதுக்குவதாகவும் இதனால் சிரமம் ஏற்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
இதன் காரணமாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, தேர்தலில் 6 ஆண்டுகள் போட்டியிட வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் நீக்கம் செய்யப்படும் என கூறியுள்ளது.
ஏற்கனவே 537 கட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, உத்திரபிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.