Connect with us

இலங்கையில் வசிக்கும் இந்தியர்கள் பதிவு செய்க-இந்திய தூதரகம்;

flag india sri lanka 260nw 1626250228 1

News

இலங்கையில் வசிக்கும் இந்தியர்கள் பதிவு செய்க-இந்திய தூதரகம்;

தற்போது கடும் பெரும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை அரசு சிக்கிக் கொண்டுள்ளது. இதன் விளைவாக மக்கள் அங்கு கிளர்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் கூட ஆங்காங்கே இலங்கையில் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. இதன் மத்தியில் இந்திய அரசு பல்வேறு விதமான உதவிகளை இலங்கைக்கு செய்து கொண்டு வருகிறது.

அவ்வபோது இந்திய தூதரகம் பல்வேறு அறிவிப்புகளையும் தகவல்களையும் வெளியிடும். இந்நிலையில் இலங்கையில் வசிக்கும் இந்தியர்களுக்கு மிக முக்கிய உத்தரவினை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் வசிக்கும் இந்தியர்கள் தங்களை இணையதளம் வழியே பதிவு செய்து கொள்ளும்படி கொழும்பு இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரியையும் வெளியிட்டு இந்திய துணை தூதரகம் அறிவித்துள்ளது. மேலதிக விவரங்களை பெற மின்னஞ்சல் முகவரியையும், தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top