ஆசிரியர்களுக்கு ‘செக்’…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

குறிப்பாக சில பள்ளிகளில் நேரத்திற்கு ஆசிரியர்கள் வராமல் இருப்பதால் மாணவர்கள் வீடு திரும்பி செல்வது, சுவர் ஏறி குதிப்பது போன்ற செயல்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்ய கல்வித்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனிடையே அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

அதே சமயம் காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment