தமிழகத்தில் கொரோனா விதிமுறைகள் விளக்கம் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

இன்று மூத்த அறிஞர் ராஜாஜியின் 50வது நினைவு நாளில் சிறப்பு புகைப்பட காட்சி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் , மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடக்கி வைத்தனர்.

அதன் பின் பேட்டி அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் தினந்தோறும் தமிழகத்தில் 4000 முதல் 5000 வரை RTBCR பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் 10ற்கும் குறைவான பாதிப்புகளே பதிவு செய்யப்பட்டு வருவதாவும் தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் தங்களது நலன் கருதி முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணிவது தனிமனித இடைவேளை விட்டு வருவது என்பது கொரோனா விதிமுறைகளில் ஏற்கனவே பின்பற்றி வருவது.

கிறிஸ்துமஸ் நாளில் இப்படியொரு துயரமா? அமெரிக்காவிற்கே இந்த நிலையா?

இந்த விதி முறைகள் இன்றளவில் நடைமுறையில் உள்ளது . விளக்கி கொள்ள வில்லை. இருந்தாலும் கூட்டமாக மக்கள் கூடும் இடங்களில் மால்களில் செல்லும் போதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இடங்களுக்கு செல்லும் பொது முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது. கடடாயமா இல்லையா என்பதை காட்டிலும் தனது உயிரை தற்காத்து கொள்வது கட்டாயம் என தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.