ரீல்ஸ் மோகம், உடைந்த பல்.. 18 வருஷம் முன்னாடி சேர்ந்த அண்ணன் – தங்கை.. சுவாரஸ்ய காரணம்..

இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்து விஷயங்களும் மிக எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது. AI தொழில்நுட்பம் என நவீன யுகங்கள் நாளுக்கு நாள் புதிய பரிமாணத்தை கண்டு வரும் நிலையில் பல வியப்பான விஷயங்களும் இது தொடர்பாக நடந்து நம்மை ஒரு நிமிடம் மெய்சிலிர்க்க வைத்து தான் வருகின்றது..

அதில் மிக முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்பட்டு வருவது தான் பல ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன குடும்பத்தினரை மீண்டும் கண்டுபிடிக்கும் ஒரு விஷயம். முன்பெல்லாம் தெரிந்த ஒருவர் எங்காவது தொலைந்து போனால் அவரை கண்டுபிடிப்பதற்கே அந்த அளவுக்கு கடினமாக இருக்கும். காணவில்லை என பல போஸ்டர்களும், செய்தித்தாள்களில் விளம்பரங்களும் இருந்தாலும் அவை அனைத்து பகுதிகளிலும் சென்று சேர்ந்து தொடர்புடைய நபரை கண்டுபிடிக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி தான்.

ஆனால் அதே நேரத்தில் தற்போது சமூகபாளையத்தளங்கள் அதிகம் வளர்ந்துள்ளதால் ஒருவரை பற்றிய செய்திகள் இணையத்தில் வைரலானால் அது நாடு முழுக்க இருக்கும் மக்கள் மத்தியில் சென்றடைந்து சிலரை கண்டுபிடிப்பதும் எளிதாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்கள் மூலம் தொலைந்து போனவர்களை நிறைய பேர் கண்டுபிடித்து மீண்டும் இணைந்த நெகழ்ச்சியான தருணங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.

அப்படி ஒரு சூழலில் நான் உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து பலரையும் நெகிழ வைத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் தான் ராஜ்குமாரி. இவரது சகோதரரான பால் கோவிந்த என்பவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பாக தொலைந்து போனதாக கூறப்படுகிறது.

இதனிடையே ராஜ்குமாரி இன்ஸ்டாகிராம் ரீல்ஸை அதிகம் பார்ப்பதையும் வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் தான், ரீல்ஸ் ஒன்றை பார்த்தபோது ஒரு நிமிடம் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார் ராஜ்குமாரி. அதில் வந்த ஒருவரது முகம் அவருக்கு பரிஜ்ஜயமான முகமாக இருக்க அது யார் என்பதை சற்று உற்று நோக்கிய போது தான் 18 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன அவரது அண்ணன் என்பதும் தெரியவந்துள்ளது.

ராஜ்குமாரியின் அண்ணனான பால் கோவிந்த் என்பவர் மும்பையில் வேலை தேட சென்ற பின்னர் திரும்பி வரவில்லை என தெரிகிறது. இதனால் கோவிந்த் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில், அவரை கண்டுபிடிக்க பல வழிகளில் முயற்சித்த போதும் பலன் கிடைக்காமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தான் ஒரு ரீல்ஸில் தனது சகோதரரை உடைந்த பல் இருப்பதை வைத்து அடையாளம் கண்டுள்ளார்.

இதன் பின்னர் தனது அண்ணனை தொடர்பு கொண்டு பேசிய ராஜ்குமாரி அவரை மீண்டும் வீட்டிற்கு வரவைத்து தனது குடும்பத்தினர் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். ரீல்ஸ் ஒன்றின் மூலம் உடைந்த பல்லின் அடிப்படையில் அண்ணனை அடையாளம் கண்டுபிடித்த சகோதரி தொடர்பான செய்தி பலரையும் மனமுருக வைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...