Connect with us

11, 12ஆம் வகுப்பு பொது செய்முறைத் தேர்வுக்கான நேரம் குறைப்பு!!: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

12th pra

செய்திகள்

11, 12ஆம் வகுப்பு பொது செய்முறைத் தேர்வுக்கான நேரம் குறைப்பு!!: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

11, 12ஆம் வகுப்பு பொது செய்முறைத் தேர்வுக்கான நேரம் குறைப்பு!!: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

நம் தமிழகத்தில் வருகின்ற திங்கட்கிழமை முதல்  11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஏற்பாடுகள் அதி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அரசு தேர்வுத்துறை சார்பில் சில முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி செய்முறை தேர்வு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது . தமிழகத்தில் 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரம் 2 மணி நேரமாக குறைக்கப்படுவதாக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக 3 மணிநேரம் நடைபெற்று வந்த செய்முறை தேர்வுகள் இனி இரண்டு மணி நேரமாகக் குறைக்கப்பட்டது என்றும் தேர்வுத் துறை கூறியுள்ளது. 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவர்களுக்கு செய்முறை தேர்வு என்பதால் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டது என்று அரசு தேர்வுத்துறை விளக்கமளித்துள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ஆம் தேதி வருகின்ற திங்கட்கிழமை முதல் இரண்டாம் தேதி வரை நடைபெற உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top