கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வைப்பு நிதி (PF)மீதான வட்டி விகிதம் குறைப்பு!

பி. எப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு எவ்வளவு வட்டி அளிப்பது என சி.பி.டி எனப்படும் மத்திய அறங்காவலர் ஆணையம் நிர்ணயம் செய்யும்.

அந்த வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிகான வட்டி விகித அறங்காவலர்கள் கூட்டம் இன்று டெல்லியில்  நடைபெற்றது . இந்தக் கூட்டத்தில் நடப்பு நிதியாண்டுக்கான மாத ஊதியம் பெறுவோர்களின் வட்டிவீதத்தை முடிவு செய்யும் பொருட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிகான வட்டி விகிதம் 8.5 சதவீதத்திலிருந்து 8.1% சதவீதமாக வட்டி குறைக்க முடிவு செய்யப்பட்டது. 2021- 22 ம் நிதி ஆண்டுக்கான பி.எப். வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் மாத ஊதியம் பெருவோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment