விரைவில் ரெட்மி பேட் 2 டேப்லெட்.. இந்தியாவில் எப்போது அறிமுகம்?

ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மிகப்பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் டேப்லெட்டும் வரவேற்பை பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ரெட்மி பேட் 2 டேப்லெட் குறித்த சிறப்பம்சங்களை தற்போது பார்ப்போம்.

ரெட்மி பேட் 2 டேப்லெட் என்பது சியாமி நிறுவனத்தின் புதிய டேப்லெட் ஆகும். இது இன்னும் ஒருசில மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டேப்லெட் டிசைன் ஆன்லைனில் கசிந்துள்ளதால் அதன் சில சிறப்பு அம்சங்களை தற்போது பார்ப்போம்

ரெட்மி பேட் 2 ஆனது Qualcomm Snapdragon 680 SoC மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மிட் ரேஞ்ச் பிராஸசர் அம்சத்தை கொண்டிருக்கும். ரெட்மி பேட் 2 டேப்லெட்டில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கும். டிஸ்ப்ளே 2000 x 1200 பிக்சல்கள் ரெசலூசன் கொண்ட 10.4 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி பேட் 2 ஆனது 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கும். டேப்லெட்டில் 7,900mAh பேட்டரியும் இருக்கும்.

ரெட்மி பேட் 2 ஆனது ஆண்ட்ராய்டு 12ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 13ஐ இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டேப்லெட் Wi-Fi 802.11ac, Bluetooth 5.0 மற்றும் USB Type-C போர்ட் ஆகிய அம்சங்களும் இருக்கும்.

ரெட்மி பேட் 2ஆனது சுமார் $250 விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரங்களில் இந்த டேப்லெட் சீனாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி பேட் 2 இன் சில முக்கிய விவரக்குறிப்புகள் இங்கே:

* 2000 x 1200 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 10.4-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல்

* Qualcomm Snapdragon 680 SoC பிராஸசர்
* 4 ஜிபி ரேம்
* 64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
* 13 எம்.பி பின்புற கேமரா
* 8 எம்.பி செல்பி கேமிரா
* 7,900mAh பேட்டரி

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews