Connect with us

‘ஒயின் குடிச்சா கொரோனா வராது’… ஆய்வில் வெளியான அசத்தல் தகவல்!

Red wine

செய்திகள்

‘ஒயின் குடிச்சா கொரோனா வராது’… ஆய்வில் வெளியான அசத்தல் தகவல்!

‘ஒயின் குடிச்சா கொரோனா வராது’… ஆய்வில் வெளியான அசத்தல் தகவல்!

வாரம் 1 முதல் 4 கோப்பை சிவப்பு ஒயின் பருகுவது, கொரோனா தொற்று பாதிப்பு அபாயத்தை 10 சதவீதம் அளவுக்கு குறைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள மக்கள் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு ஆய்வு முடிவுகளின் கொரோனா பரவலுக்குப் பிந்தைய மக்களின் மனநிலை ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடிமகன்களுக்கு குஷியான செய்தி ஒன்றை பிரபல இதழ் வெளியிட்டுள்ளது.

அந்த இதழ் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளின் படி, வாரம் 1 முதல் 4 கோப்பை சிவப்பு ஒயின் குடிப்பது கொரோனா தொற்று பாதிப்பு அபாயத்தை 10 சதவீதம் அளவுக்கு குறைப்பதாக தெரிவித்துள்ளது.

அதேசமயம் வாரம் 5 அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் ரெட் ஒயின் அருந்தினால் கொரோனா பரவும் அபாயம் 17 சதவீதமாக குறையும் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் வெள்ளை ஒயினும், சாம்பைனும் கூட நன்மை அளிக்கின்றன என்றாலும், அவற்றின் பலன் சிவப்பு ஒயினுடன் ஒப்பிடும்போது குறைவுதானாம். ஆனால் குடிமகன்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக மற்றொரு ட்விஸ்ட்டும் இருக்கிறது. அது என்னவென்றால் பீர் குடிப்பது கொரோனா தொற்றுக்கு ஆளாகும் அளவை 78 சதவீதம் வரை அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top