புகைப்பிடிப்பதை நிறுத்தும் அதிசய பழம் இதுவா?!!! தினம் ஒன்று சாப்பிட்டால் போதும்…! உங்களிடமிருந்து ஏராளமான நோய்கள் ஓடிவிடும்…!!!

செவ்வாழையில் பொட்டாசியம், வைட்டமின் பி6, மெக்னீசியம் என பல தாது உப்புகள் நிறைந்து கிடக்கின்றன. பொட்டாசியம் குறிப்பாக நம்ம வெப்பத்தைக் கட்டுப்படுத்துகிறது. சிறுநீரகக் கல் வராமல் தடுக்கிறது.

smoking
smoking

புகைப்பிடிப்பவர்கள் அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீள செவ்வாழைப்பழமானது மிகவும் உறுதுணையாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் செவ்வாழையில் உள்ள பொட்டாசியமும், மெக்னீசியமும் தான். மேலும் நமது சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கிறது.

செவ்வாழையில் உள்ள வைட்டமின் பி 6 நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதன் மூலமாக நமக்கு அனீமியா வராமலும் தடுக்க முடியும். இதற்கு ஒரு நாளைக்கு 2 செவ்வாழைப்பழமாவது சாப்பிட்டு வர வேண்டும்.

செவ்வாழைப்பழம் நமது செரிமானத்தை சீராக்கவும் செய்கிறது. மூலத்தையும் சரி செய்ய உதவுகிறது. அல்சர் வியாதியைக் குணப்படுத்த உதவுகிறது. அதிகப்படியான அமிலத்தன்மையைக் குறைக்கிறது.

அல்சர், நெஞ்செரிச்சல் பிரச்சனை உள்ளவர்கள் தினசரி ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு அதிமதுரம் பொடி 1 டீஸ்பூன் மற்றும் 1 கிளாஸ் தண்ணீர் குடித்தால் போதும். அல்சர் சீக்கிரமாகவே குணமாகும்.

Acidity
Acidity

ஒரு சிலருக்கு மார்பு வலி வரும். அவர்களுக்கு தோள்பட்டை, கழுத்து வரை இந்த வலி பரவும். இதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால் நமது இதயத்திற்குப் போகக்கூடிய இரத்த ஓட்டமானது தடைபடுகிறது.

இதனால் தான் இந்த வலி உண்டாகிறது. இதிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் தினமும் 2 செவ்வாழையை மசித்து விட்டு ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தினமும் நாம் சாப்பிட்டு வந்தால் போதும்.

red banana2
red banana

சில குழந்தைகளுக்கு குச்சி, சாக்பீஸ் ஆகியவற்றை ஆர்வமாக சாப்பிடும். இவர்களுக்கு தினமும் ஒரு செவ்வாழைப்பழம் கொடுத்தால் போதும். அவர்களோட எனர்ஜி லெவல் நல்லா இருக்கும்.

மேலும் குழந்தைகள் குச்சி, சாக்பீஸ் சாப்பிடுவதையும் நிறுத்தி விடும். சிறுநீரகக்கோளாறு உள்ளவர்கள், பொட்டாசியம் சாப்பிடக் கட்டுப்பாட்டுடன் உள்ளவர்கள் மட்டும் செவ்வாழைப்பழத்தை சாப்பிடாமல் இருக்கலாம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.