9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை எச்சரிக்கை

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த அறிக்கையில் சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment