
Tamil Nadu
4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்தில் அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். நேற்றும் இன்றும் கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்படுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
