தூத்துகுடி மட்டுமல்ல, மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது என்பதும் இதன் காரணமாக அம்மாவட்டம் முழுவதும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது என்பதையும் சற்று முன்னர் பார்த்தோம்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில மணி நேரங்களாக நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் கன மழை கொட்டி வருகிறது என்பதால் மேற்கண்ட இரண்டு மாவட்டங்களுக்கும் அடுத்த சில மணி நேரங்கள் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி அரியலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment