தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகம் முழுவதற்கும் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் இதனால் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் அதிக கனமழையும் மற்ற பகுதிகளில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாகவும் மக்கள் தேவை இன்றி வெளியே வரவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

ஏற்கனவே சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மிக அதிக கனமழை பெய்து வருகிறது என்பதும் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment