12 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ரெட்அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

வங்கக்கடலில் தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் இரண்டு நாட்களில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் 12 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள 12 மாவட்டங்களின் விவரங்கள் பின்வருமாறு: சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment